2025 ஜூலை 30, புதன்கிழமை

குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில்  குடும்பங்களை தலைமை தாங்கிவருகின்ற 19 பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்களை மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை வழங்கி வைத்துள்ளது.

இவர்களில் 10 பேருக்கு சிறிய கடை நடத்துவதற்கான பொருட்களும் ஏனைய 9 பேருக்கும் தையல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் சுயதொழில் உபகரணங்களுக்காக 103 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 19 பேருக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக ஏனைய பயனாளிகளுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்படுமென மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை தெரிவித்தார்.  

மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை, மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எம்.எம்.ஆலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .