2025 ஜூலை 30, புதன்கிழமை

த.தே.கூ.வின் உறுப்பினர் ஜ.ஐ.மு.வில் இணைவு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனநாயக ஐக்கிய முன்னணியில் இணைந்துள்ளதாக ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தலைவர் வி.சகாதேவன் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

வவுனியா பகுதியைச் சேர்ந்த
ஏ.எம்.கே.தில்லைமோகன் (ஓமோஸ்) என்பவரே இவ்வாறு இணைந்து கொண்டு வடமாகாண சபை தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் தீவிர தமிழ் பற்றாளருமாக விளங்கிய தில்லைமோகன், கடந்த 2006ஆம் ஆண்டு வவுனியா நகர சபை தேர்;தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் இல 5இல் போட்டியிடுவதற்கான வேட்பாளராக  களமிறங்கியிருந்தார்.

அவ்வேளை தில்லைமோகன் மற்றும் சகவேட்பாளரான செந்தில்நாதன் ஆகியோர் மீதான தாக்குதலில் செந்தில்நாதன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தாக்குதல் சம்பவத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, இத்தேர்தல் இரத்துச் செய்ததாக வி.சகாதேவன் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது தழிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி ஜனநாயக ஐக்கிய மக்கள் முன்னணியில் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .