2025 ஜூலை 30, புதன்கிழமை

பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பொதுமக்களிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறைவுற்ற நிலையில், அவை பொதுமக்களிடம் இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் கடற்றொழில்  அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மன்னார் பேசாலை கடற்கரை வீதியில்; 5 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட திறந்த கிணறு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 19 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கடற்றொழில் சேவை நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் 19 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட எருக்கலம்பிட்டி கடற்கரை வீதி திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 19 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மன்னார், பள்ளிமுனை மீனவர் கூட்டுறவுச்சங்க கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன், கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .