2025 ஜூலை 30, புதன்கிழமை

மத்திய வங்கியின் வடமாகாண ஆலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சிவகருணாகரன், ரொமேஷ் மதுசங்க


கிளிநொச்சி அறிவியல் நகரில் இலங்கை மத்திய வங்கியின் உத்தேச வடமாகாண அலுவலக கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது.

வடமாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் குறித்த அலுவலகமானது 150 மில்லியன் ரூபாய் செலவில் ஒருவருட காலத்திற்குள் நிர்மாணித்து முடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற  உறுப்பினர் சந்திரகுமார், மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கம், கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி உள்ளிட்ட வங்கிகளின் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .