2025 ஜூலை 30, புதன்கிழமை

தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக  இரு பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் தாக்ககுதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீடத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற வர்த்தக பீட மாணவர்கள் அங்கிருந்த மாணவர்கள் மீது சராமரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் காயமடைந்ததுடன் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இத்தாக்குதலை கண்டித்தும் தாக்குதலுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோறியும் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை ஆர்பப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குருமன்காடு வளாகத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் பேரணியாக மன்னார் வீதி வழியாக சென்று பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக பிரிவு கட்டிடத்தை சென்றடைந்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'தாக்குதல் நடத்திய காடையர் மீது உடனடியாக விசாரணை செய்', 'மது போதையில் தாக்குதல் நடத்தும் அவர்களை இடைநிறுத்து', 'பல்கலைக்கழக காவலாளியை மாற்று',  'மூன்று முறை தெரியப்படுத்தியும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை', 'ரவுடிகளுக்கு நிர்வாகம் பயமா?' போன்ற வாசகங்கள் தாங்கிய சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.

இதன்போது, யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக பிரயோக விஞ்ஞானபீட பீடாதிபதி எஸ்.குகனேசன் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியதுடன் மாணவர்களால் வழங்கப்பட்ட மகஜரையும் பெற்றுக்கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .