2025 ஜூலை 30, புதன்கிழமை

தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல: உதயராசா

Super User   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ் தேசியத்திற்கோ தமிழ் மக்களுக்கோ நான் எதிரானவன் அல்ல என்பதனை இந்த தேர்தலில் பலரும் உணர்வார்கள் என ஸ்ரீ டெலோவின் செயலாளர் நாயகமும் வட மாகாண சபை தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிடும் ப. உதயராசா தெரிவித்தார்.

வவுனியா குட்செட் வீதியிலுள்ள தேர்தல் அலுவலகத்தை இன்று செவ்வாய்கிழமை திறந்துவைத்த பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நான் போட்டியிடுவதனால் தவறான கண்னோட்டத்தை ஏற்படுத்த முனைகின்றனர். ஆனால் பல இன்னல்கள் வந்த நிலையிலும் இந்த மண்ணை விட்டு எக்காரணம் கொண்டும் நான் வெளியேறவில்லை.

எனது அலுவலகத்தில் எப்போதும் மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றேன். தேர்தலுக்காக மக்கள் மத்தியில் செல்பவன் அல்ல நான். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நகர சபை தேர்தல்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் எனது மக்களுக்கு என்னாலான சேவையினை எனது பணத்தின் மூலம் செய்து வந்துள்ளதை மக்கள் நன்கறிவர்.

இந்த நிலையில் எமது மாவட்டம் என்ற உணர்வை வெளிப்படுத்தி இத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கையில் உள்ளது. வட மாகாணத்தில் பாரிய மாற்றத்தை கொண்டு வருவதனூடாகத்தான் எமது மாவட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் மற்றுக்கருத்தில்லை.

எனவே இத்தேர்தலில் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும். நாம் வெற்றி பெற்றால் எவ்வாறான வேலைத்திட்டத்தை மேற்கொள்வோம் எனற கருத்தினை கிராம மக்களுக்கு தெரிவிப்பதுடன் தேர்தலில் வாக்களிக்கும் செயற்பாட்டை தெளிவுபடுத்தவும் வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னம் என்பது சிங்களவர்களுக்கு உரியது என்ற எண்ணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பரப்பபட்டுள்ளது. அந்த வகையிலேயே உதயராசா நல்லவர் வெற்றிலை சின்னம் சரியில்லை என்ற கருத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வருகிறனர்.

இனவாத்தை துண்டுவதாக அல்லாமல் கூறுவதாக இருந்தால் வயது வந்த தமிழர்களோ அல்லது இளைஞர்களோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனோ அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுடனோ போட்டியிட்ட வரலாறு இல்லை. ஏனெனில் அதில் இனம் சார்ந்த கட்சியென்பது முத்திரை குத்தப்படுகின்றது.

ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பதத்துடனேயே இக்கட்சியுள்ளதே தவிர ஐக்கிய மக்கள் சிங்கள சுதந்திரக் கூட்டமைப்பு என இல்லை என்பதனை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டிய தேவையுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஸ்ரீ டெலோ தனது தனித்துவத்துடன் முதன்மை வேட்பாளரை பெற்று போட்டியிடுகின்றது.

மலையகத்தை பொறுத்தவரை அங்குள்ள மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் ஊடாக தமது பகுதி அபிவிருத்திகளை மேற்கொண்டு செல்கின்றார்கள். அதேபோல் முஸ்லிம் தலைமைகளும் தமிழ் தலைமைகள் சிலவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இடதுசாரி தலைவர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக உள்ளனர்.

அவ்வாறுள்ளவர்கள் அரசிற்குள் இருந்துகொண்டே தமது இன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் சுதந்திரக் கூட்டமைப்பு சுதந்திரமானது என்பதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இத்தேர்தலில் பெறும் வெற்றியினூடாக எமது மாவட்டத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .