2025 ஜூலை 30, புதன்கிழமை

மடு ஆவணித் திருவிழா நாளை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு ஆவணித் திருவிழா நாளை 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.  இந்நிலையில், வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெறும்.

இம்முறை திருவிழாவில் இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி மேதகு ஜோசப் ஸ்பிற்ரறி, மன்னார் ஆயர் இரா. யோசேப் ஆண்டகை, யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை, கண்டி  ஆயர்  வியான்னி பெர்னாண்டோ ஆண்டகை, கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை,  அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை ஆகியோர் இணைந்து மடு திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

இன்று புதன்கிழமை மாலை 6.15 மணிக்கு  வேஸ்பர் ஆராதனைகள் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். நற்கருணைப் பவனியும் இடம்பெறும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .