2025 ஜூலை 30, புதன்கிழமை

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முல்லைத்தீவு விஜயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமேவிற்கும் முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை முள்ளியவளை தண்ணீரூற்ற பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது புதிதாக நியமனம் பெற்றுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்ற கிராமங்களில் சமுர்த்தி மற்றும் திவிநெகும அபிவிருத்தி திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும், மக்களுக்கு எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பது பற்றியும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் பிரதி அமைச்சர் கலந்துரையாடினார்.

அத்துடன் முல்லைத்திவு மாவட்டத்திலுள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட கிராமங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .