2025 ஜூலை 30, புதன்கிழமை

சிவில் சமூக அமைப்புக்களை கட்டியெழுப்பும் கலந்துரையாடல்

Super User   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சிவில் சமூக அமைப்புக்களின் மன்றங்களைக் கட்டியெழுப்பும் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை வவுனியாவில் ஆரம்பமானது.

வவுனியா ஸ்வர்க்கா விடுதியில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என  கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்டத்தில் வட மாகாண சபைத் தேர்தலுக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சிவில் நிறுவனங்களின் மன்றம் ஒன்றைக் கட்டி எழுப்பும் (இந்த கலந்துரையாடலில் 'கபே' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், இணைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்கராஜா, கபே கபே வவுனியா மாவட்ட இணைப்பாளர் ராஜ்மோஹன் சர்மா, கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும் கொழும்புப் பல்கலைக்கழக  சர்வதேச உறவுகள் பகுதி நேர விரிவுரையாளருமான என்.எல். அப்துல் கலாம் வவுனியா மாவட்ட பெண்கள் தொழில் முயற்சியாளர் சங்க செயலாளர் எஸ். ஜிப்ரியா பேகம் ஆகியோர் கலந்துரையாடல்களை நெறிப்படுத்தினர்.

சமகால சூழலில் சிவில் சமூக அமைப்புக்களைப் பலப்படுத்தி,  அனைத்து சிவில் சமூக அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டி எழுப்புதலின் முக்கியத்துவம் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பங்களிப்புப் பற்றியும் இக்கலந்துரையாடலில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .