2025 ஜூலை 30, புதன்கிழமை

ஐ. ம. சு. மு.இன் அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்


எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான தேர்தல் அலுவலகம் இன்று சனிக்கிழமை முல்லைத்தீவு நகரத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த கட்சியின் பிரதான தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலம, குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் எம்.முபாறக், உள்ளிட்;ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் அதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .