2025 ஜூலை 30, புதன்கிழமை

தேர்தல் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கம்

Super User   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வட மாகாண சபைத் தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தேர்தல் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். சிவில் சமூக அமைப்புக்களின் மன்றங்களைக் கட்டியெழுப்பும் கலந்துரையாடல் வவுனியாவில் வார இறுதியில் இடம்பெற்றது. இதன்போதே இந்த இணக்கம் காணப்பட்டது.

கபே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் வட மாகாண சபை தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில்; போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயேச்சைக் குழு அபேட்சகர்கள் என பலர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .