2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நகர பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நோக்கில்  நடமாடும் சேவை இன்று புதன்கிழமை நடைபெற்று வருகின்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) அனுசரணையுடன் இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகின்றது.
மன்னார் நகர பிரதேச செயலகத்தில் நடைபெற்றுவரும் இந்த நடமாடும் சேவையில் இலவசமாக புகைப்படம் எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், முத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்காகவே இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டுவருவதாக மன்னார் பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான நிர்வாக அலுவலகர் எஸ்.ஏ.பெர்ணான்டோ தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .