2025 ஜூலை 30, புதன்கிழமை

வவுனியாவில் தனிநாயகம் அடிகளார் நினைவு நாள்

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தமிழுக்கும் சைவத்திற்கும் பணியாற்றிய தனிநாயகம் அடிகளாரின் நினைவு நாள் வவுனியா மணிக் கூட்டு கோபுர சந்தியில் உள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வவுனியா வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் சந்திரகுமார், கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தைச்சேர்ந்த மாணிக்கம் ஜெகன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயற்குழு உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சிரேஸ்ட உறுப்பினருமாகிய சிவசிதம்பரம் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வவுனியா நகர சபைக்கு சொந்தமான தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலையானது நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி காணப்பட்டமையால் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயற்குழு உறப்பினர் சிவசிதம்பரம் என்பவரால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .