2025 ஜூலை 30, புதன்கிழமை

வவுனியாவில் தேர்தல் ஆணையாளர்

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க


வட மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வியாழக்கிழமை வவுனியா மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வவுனியாவில் தேர்தல் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளரிடம் கேட்டறிந்து கொண்ட அவர் வவுனியா மாவட்ட தேர்தல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார். இதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

"சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. அவ்வாறு நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.  இராணுவம் தேர்தல் செயற்பாடுகளை குழப்புவதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை. அவ்வாறான முறைப்பாடுகள் சிவில் அமைப்புகளிடம் இருந்த இதுவரை கிடைக்கவில்லை.

எனவே ஆதாரமற்ற அவ்வாறான முறைப்பாடுக்ள போலியானவையாகவுள்ளது. இதேவேளை தேர்தல் வன்முறைகள் சம்பவம் தொடர்பாக பொலிஸில் பாரிய முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. அபேட்சகர்களுக்கு ஏற்படும் முறைப்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அவை தொடர்பில் விசாரணை நடத்துமளவிற்கு பாரியளவில் இல்லை.

எனினும் பொலிஸார் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பதில் அவதானமாக உள்ளனர். எனினும் இதுவரை அவ்வாறான பாரியளவான சம்பவங்கள் இடம்பெறவில்லை. அத்துடன் அபேட்சகர்கள் எவரும் தேர்தல் சட்டதிட்டஙகளுக்கு அமைவாக எங்கும் சென்று தனது பிரசார செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .