2025 ஜூலை 30, புதன்கிழமை

அக்கராயன் குளத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிளிநொச்சி அக்கராயன் குளத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை இளம் பெண்ணொருவரின் சடலத்தை தாம் மீட்டதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கராயன் பகுதி கரைச்சி கிராம வாசியான 33 வயதான வேலு தங்கா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோயிலுக்குச் செல்வதற்காக நீராடுவதற்குச் சென்ற இப்பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தேடிச் சென்ற பொழுது அவர் குளத்தில் வீழ்ந்து மரணமாகிக் கிடப்பது தெரிய வந்ததாக உறவினர்கள் கூறினர்.

இதுபற்றி அக்கராயன் பொலிஸ் சாவடியிலுள்ள பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கடற்படையினர் சகிதம் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.

குளத்தில் விழுந்து இறந்த குறித்த பெண் அடிக்கடி வலிப்பு நோயால்  அவஸ்தைப்படுபவர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .