2025 ஜூலை 30, புதன்கிழமை

வீதி விளம்பர பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் கல்வி நிலையங்கள் மற்றும் தேர்தல் சுவரொட்டிகளை வீதி பெயர்ப்பலகைகளில் ஒட்டுவதால் பொது மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நீண்ட காலங்களுக்கு பின்னர் வவுனியாவில் பல வீதிகளுக்கும் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் நகரசபையினூடாக வீதி பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ள நிலையில், தனியார் கல்வி நிலையங்கள் சமூக நலனைக் கருத்தில் கொள்ளாது அவற்றில் தமது கல்வி நிலையங்களின் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் சுவரொட்டிகள் உட்பட பல் தேசிய கம்பனிகளும் இவற்றில் தமது சுவரொட்டிகளை காட்சிப்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக புதிதாக வவனியாவிற்குள் வருபவர்கள் உட்பட பலரும் வீதிகளை அடையாளம் காண முடியாமல் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முறைக்கென செயற்பாட்டில் ஈடுபடுவோர் மீது வவுனியா நகரசபை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .