2025 ஜூலை 30, புதன்கிழமை

தேர்தல் சட்டத்திற்கு முரணாக சுவரொட்டி ஒட்டிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விடுதலை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் தேர்தல் சட்டத்திற்கு முரணாக சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை ஈச்சங்குளம் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்த மூவரே இவ்வாறு சனிக்கிழமை (24) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து இவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் கனகராயன்குளம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளுடன் சென்ற வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் அதில் பயணித்தவர்களும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .