2025 ஜூலை 30, புதன்கிழமை

மீனவர் கரை திரும்பவில்லை; பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் வீடு திரும்பாமை தொடர்பில் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த மீனவர் வீடு திரும்பாமை தொடர்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை இரவு கண்ணாடியிலைப் படகு ஒன்றில் கடற்றொழிலுக்குச் சென்றிருந்தனர்.

இவ்வாறு கடற்றொழிலுக்குச் சென்ற இவர்கள் இருவரும் மறுநாள் வெள்ளிக்கிழமை கரை திரும்பவில்லை. ஆனால், இவர்கள் சென்ற படகு கரை ஒதுங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடலில் தேடுதலை மேற்கொண்ட தலைமன்னார் கடற்படையினர், இவர்களில் ஒருவரை மீட்டு பேசாலை
வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

2 பிள்ளைகளின் தந்தையான ஸ்டார்லின் ஜெராட் (வயது 39) என்பவர்  தொடர்பிலேயே எவ்வித தகவலும் தெரியவரவில்லை. 

இந்த நிலையில், இவரைக் கண்டுபிடித்துத் தருமாறு  உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .