2025 ஜூலை 30, புதன்கிழமை

பெண்கள், சிறுவர் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாணத்திலுள்ள  பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலை நடத்துவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்கள மண்டபத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் இலங்கை பெண்கள் பணியகமும் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபனமும் இணைந்து இந்தக் கலந்துரையாடலை நடத்தவுள்ளதாகவும்; அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .