2025 ஜூலை 30, புதன்கிழமை

'வடக்கில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காணாமல் போயுள்ளனர்'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'வடக்கில் இன்று ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காணமால் போயுள்ளனர்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா, வீரபுரம் கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தினை திறந்து வைத்து பின்  உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தெடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இறுதி யுத்தத்தில் பல பெண்கள் தமது கணவன்மாரை இராணுவத்திடம் ஒப்படைத்து வந்த நிலையில் இன்று அவர்களை தொலைத்து விட்டு நிற்கின்றார்கள். இதேவேளை வடக்கில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் 12,000 மாணவர்களுக்கு தாய், தந்தை இல்லை. இருவரும் இல்லாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

இதற்கும் மேலாக 1000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு உடம்பின் பல பகுதிகளிலும் குண்டுகளில் துகள்கள் காணப்படுகின்றன. அவை இன்றும் அகற்றப்படாது இருக்கின்றன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .