2025 ஜூலை 30, புதன்கிழமை

ஐ.தே.வின் மன்னார் மாவட்ட மத்திய அலுவலகம் நாளை திறப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட மத்திய அலுவலகம் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 2 மணிக்கு மன்னார் 'கொண்வென்ட்' பிரதான வீதியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி தெரிவித்தார்.

அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சுவாமிநாதன் மற்றும் ரவி கருநாநாயக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .