2025 ஜூலை 30, புதன்கிழமை

எனக்கெதிராக ஜனாதிபதியிடம் சென்று பொய்களை கூறியுள்ளனர்: அமைச்சர் றிசாட்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மன்னார் மாவட்ட முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் நீதி கோரி போராட்டங்களை  நாம் முன்னெடுத்தால் அதனை இனவாதமாக திரித்து கூறுபவர்களாக சிலர் செயற்படுகின்றனர்' என அமைச்சர் றிசாட் பதீயுதீன் தெரிவித்தார்.

மன்னார் உப்புக்குளத்தில் இடம்பெற்ற அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'உப்புக்குளம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறை தொடர்பில் பேசுவதற்கு வக்கிலாதவர்கள், இம்மக்களது வாக்குகளை பெறுவதற்கு இன்று வருகின்றனர். செய்யாத குற்றம் ஒன்றுக்காக சிரமங்களை அனுபவித்த இப்பிரதேச மக்களின் விமோசனத்திற்கு எப்பங்களிப்பினையும் செய்யாமல் இன்று இந்த மக்களிடம் வந்து பொய்யையும், பிதட்டலையும் கூறி, வாக்குகளை பெறுவதற்கு முனைபவர்களுக்கு நீங்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்.

நீதி அமைச்சராக இருந்து கொண்டு உப்புக்குளம் மக்களுக்கு எவ்வித உதவியினை செய்ய முடியாத தலைலமைத்துவத்தை இங்கு அழைத்துவந்து உங்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி, வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக சிதறடிக்கும் சதிகாரர்களை ஓரங்கட்ட வேண்டும்.

எமது மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதற்கு நியாம் பெற்றுகொடுக்க வந்த என்னையும் குற்றவாளியாக அடையாளப்படுத்தி எமது சமூகத்தின் இழப்புக்களுக்கு காரணமாக இருந்த துரோகிகளின் முகத்திரைகளை கிழித்தெறியும் நல்லதொரு சந்தர்ப்பமாக இந்த தேர்தலை உப்புக்குளம் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

என்னை பொறுத்த வரையில் நான் இந்த மாவட்டத்தில் வாழும் அனைத்து சமூகங்களின் தேவைகளை கண்டறிந்து அவற்றை சரிசமமாக பெற்றுகொடுக்கும் பணியினை செய்துவருகின்றேன். ஆனால் சிலர் எனக்கெதிராக ஜனாதிபதியிடம் சென்று பொய்களை இட்டுக்கட்டிவிட்டு வந்துள்ளனர். இவைகள் பொய் என்பதை இந்த நாட்டு ஜனாதிபதி நன்கறிவார்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .