2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னார் ஆயர் - விக்னேஸ்வரன் சந்திப்பு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வட மாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள்; நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், மக்களின் மீள் குடியேற்றம், இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்களநாதன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியேந்திரன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முஸ்ஸிம் வேட்பாளரான அயூப் அஸ்மி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .