2025 ஜூலை 30, புதன்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 41 பேரின் விளக்கமறியல் மன்னார் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இருவேறு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டிருந்த இந்த 41 மீனவர்களும் நேற்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில்  ஆஜர்செய்யப்பட்டனர்.

இதன்போது இந்த மீனவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி   வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.

கடந்த 22ஆம் திகதி குறித்த 41 இந்திய மீனவர்களும் மன்னார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது  அவர்களுக்கு எதிராக தலைமன்னார் பொலிஸாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையிலலே ஆவர்கள் மீண்டும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .