2025 ஜூலை 30, புதன்கிழமை

சுந்தரபுரத்தில் ஒருவர் படுகொலை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழனிரவு 9 மணியளவில் இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சுந்தரபுரம் வாசியான சுந்தரம் சதீஸ்வரன் (வயது 30) என்பவரே குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டில் பணிபுரிந்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஈச்சங்குளம் பொலிஸ் காவல் சாவடியிலுள்ள பொலிசாரும், வவுனியா விசேட துப்பறியும் பொலிஸாரும் மோப்ப நாய்கள் சகிதம் சென்றுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .