2025 ஜூலை 30, புதன்கிழமை

சமூக நல சங்கங்கள் இரட்டை வேடம் இடுவது ஏன்: செல்வராசா கேள்வி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்கள் தேர்தல் காலங்களில்  வேட்பாளர்களின் பின்னால் சென்று அரசியல் வேடமிடுவதுடன்  நடுநிலைமை,பாராபட்சமின்மை என்ற அடிப்படை விழுமியங்களை அவர்கள் அழித்தொழிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,வடமாகாண சபை தேர்தலின் மன்னார் மாவட்ட வேட்பாளருமான செல்வராசா செல்வக்குமரன்(டிலான்) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் சில பிரபல்யமான அரச சார்பற்ற மற்றும் சமூக அமைப்புகளான பிரஜைகள் குழு,மீனவ ஒத்துழைப்புப்பேரவை,இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகிய நிறுவனங்களின் அங்கத்தவர்கள் தாங்கள் சார்ந்த நிறுவனங்களின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்.

தமிழர் உணர்வு,தமிழ் தேசியம் என்று மக்களின்; உணர்வுகளை தட்டி விட்டு அரசியல் இலாபம் தேடும் சில அரசியல் வாதிகளுக்காக வாக்கு சேகரிக்கும் சில பணிகளை pகத்துரிதமாகவும்,சாதூரியமாகவும்,செயற்பட்டு வருகின்றனர்.இது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொது நிலையினர் மற்றும் நடு நிலையான சங்கங்களின் அங்கத்தவர்கள் தங்கள் நடுநிலைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .