2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னார் சு.க அங்கத்தவர்களுக்கு அங்கத்துவ அட்டை வழங்கிவைப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


கடல் தொழில் பிரதியமைச்சர் சரத்குமார குணரட்ன மற்றும் சுற்றுச் சூழல்,அரச வழங்கள் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோர் இன்று சனிக்கிழமை காலை மன்னாருக்கு விஜயம் செய்தனர்.

அவ்விருவரும் மன்னார் உப்புக்குளத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் சந்திப்பிலும் பங்கேற்றனர்.

இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவர்களுக்கான அங்கத்துவ அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.

-மக்கள் சந்திப்பின் போது மீள் குடியேறிய மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,இந்திய வீட்டத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் அநீதிகள் உட்பட பல பிரச்சினைகளை மக்கள் முன்வைத்தனர்.

-குறித்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மன்னார் மாவட்ட பிரதான அமைப்பாளர் பி.சூசைதாசன் குளாஸ்,செயலாளர் என்.சேமாலை பீரின் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான செல்வக்குமரன் டிலான்,ஏ.றொபேட் பீரிஸ்,செபமாலை திஸவீரசிங்கம்(லிங்கேஸ்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .