2025 ஜூலை 30, புதன்கிழமை

மின்னல் தாக்கியதில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சேனப்புலவு கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு  மின்னல் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று சனிக்கிழமை மாலையிலிருந்து இடியுடன் கூடிய மழை  பெய்து வந்த நிலையிலேயே இவர்கள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்கள் தங்களது வீட்டில் இருந்த வேளையிலேயே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

மின்னல்  தாக்கத்திற்கு உள்ளான இவர்கள் இருவருக்கும் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வீடு ஒன்றின்  மீது மின்னல் தாக்கியதில் அந்த வீட்டின் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் க.பரமேஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .