2025 ஜூலை 30, புதன்கிழமை

த.தே.கூ.விற்கு மட்டும் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை: செல்வம் எம்.பி.

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'வடமாகாண சபை தேர்தலின் தேர்தலுக்காக ஒலிபெருக்கியை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட அனைத்து கட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள  போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாத்திரம்  மன்னார் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'வடமாகாண சபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை அனைத்துக்கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மன்னார் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வகையில் வாகனங்கிளில் ஒலி பெருக்கியினை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மன்னாரில் பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக எமது கட்சி சார்பாக மன்னார் தேர்தல் திணைக்களத்திலும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது' என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .