2025 ஜூலை 30, புதன்கிழமை

ஒலுமடுக் கிராமத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி இந்திய வீட்டுத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடுக் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தெரிவித்தார்.

ஒலுமடுக் கிராமத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டமையால் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

ஒலுமடுக் கிராமத்தில் 288 குடும்பங்கள் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டபோது, ஜனாதிபதி செயலணிக்குழுவின் உத்தரவிற்கமைய புள்ளிகளின்; அடிப்படையில்  235 பேருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. மேலும், 20 பேருக்கு வீட்டுத்திட்டம் தேவைப்படுவதாக  வவுனியா அரசாங்க அதிபரிடமும் ஜனாதிபதி செயலணியிடமும் தான் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் ஒலுமடுக் கிராமத்தில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இல்லாதவர்களுக்கும்  ஏனையோரின் காணிகளில் வசித்து வருபவர்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

இந்த நிலையில், வீட்டுத்திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கு 3ஆம் கட்ட வீட்டுத்திட்டத்தில் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிலர் சீராக தமது கடமைகளை செய்யவிடாது மக்களை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனரெனவும் இவ்வாறானவர்களால்   மீள்குடியேறிய மக்கள் அடைய வேண்டிய சில சலுகைகளும் உரிமைகளும் கிடைக்காது போகக்கூடுமெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .