2025 ஜூலை 30, புதன்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2013 செப்டெம்பர் 03 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு, கொக்குத் தொடுவா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கருனாட்டுக்கேணியைச் சேர்ந்த கே.சந்திரன் எனும் 5 பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது மனைவியுடன் கருணாட்டுக்கேணியில் இருந்து கொக்குத்தொடுவாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகெண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினால் வீதியோரத்தில் நின்ற பெரிய மரம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி பலத்த காயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமானவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .