2025 ஜூலை 30, புதன்கிழமை

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சமுர்த்திப் பயனாளிகளின் குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்கான கொடுப்பனவுகளை அவர்களின் உறவினர்களிடம் மன்னார் நானாட்டான் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிலையம் வழங்கி வைத்தது.

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 7 குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபா படி இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

நானாட்டான் பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை அப்பிரதேச செயலாளர் எஸ்.சந்திரையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நானாட்டான் பிரதேச சமுர்த்தி முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .