2025 ஜூலை 30, புதன்கிழமை

அரச தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தில் அரச சார்பான நிறுவனங்களில் தொழில்புரியும் தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடலொன்று வெள்ளிக்கிழமை (6) வவனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்த இவ் ஒன்றுகூடலில் தற்போதைய அரசு செய்து வரும் பல்வெறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டிருந்தது.

இதன்போது வட மாகாணசபையில் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை, பெற்றோலிய கூட்டத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நீர்ப்பாசன சபை, இலங்கை Nhபக்குவரத்துச்சேவை தொழிற்சங்கங்களை சேர்ந்த அதிகாரிகள் உட்பட வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .