2025 ஜூலை 30, புதன்கிழமை

காணாமல்போன நபர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை- மாத்தளன் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் ஆணொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

51 வயதான இராசெட்ணம் திலகேஸ்வரன் என்பவரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாடசாலையொன்றில் ஆசிரியையாய கடமையாற்றிய இவர், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் தனது வீட்டின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .