2025 ஜூலை 30, புதன்கிழமை

பழையவாடி கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, புளியங்குளம் - பழையவாடி கிராமத்திற்கு மின்சார இணைப்புகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வட மாகாண ஆளுனரின் இணைப்பாளர் எம்.முஹைதீன் தெரிவித்தார்.

மக்கள் மீள்குடியேறியுள்ள நிலையில் பழையவாடி கிராமத்திற்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மின்சாரம் வழங்குவதற்கா நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கோடு வட மாகாண ஆளுநரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் முகைதீன் தலைமையிலான குழுவினர் மின்சார சபை உயர் அதிகாhகளுடன் அக்கிராமத்திற்கு நேரடியாக சென்று மின்சாரம் வழங்குவது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது அக்கிரமத்தின் தகவல்களை சேகரித்த நிலையில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துவதாக ஆளுனரின் இணைப்பாளர் அப்பகுதி மக்களிடம் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை புதூர் சந்தியிலும் மின்சாரம் வழங்குவது தொடர்பில் மாகாண ஆளுனரின் இணைப்பாளர் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்துள்ளதுடன் மின்சரம் வழங்குவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .