2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்கள் நியமனம்

Super User   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


மன்னாரிலுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு அமைப்பாளர்களை நியமிக்கும் செயற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பிரதேச அமைப்பாளர்கள் நியமனமும் கலந்துரையாடலும் மன்னார் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பரக்கதுள்ளா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாருக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .