2025 ஜூலை 30, புதன்கிழமை

மடு விபத்தில் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மடு - பரயநாளன்குளம் பிரதான வீதியில் உள்ள ரயில்  பாதையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

மடு - பரயநாளன்குளம் பிரதான வீதியில் உள்ள ரயில் பாதையைக் கடந்து செல்ல முற்பட்ட டிப்பர் ரக வண்டி ஒன்று, மடு ரயில்  நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார், தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த டிப்பர் வாகனத்தின் சாரதியான வடிவேல் செல்வக்குமார் (வயது 33) என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

சடலம் தற்போது முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .