2025 ஜூலை 30, புதன்கிழமை

மாஞ்சோலை வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு, மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர்கள் மற்றும் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட ஏனைய குறைபாடுகளையும் உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறியுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டிசுட்டான், கருனாட்டுக்கேணி, முள்ளிவாய்க்கால், முறிப்பு, குமுழமுனை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது மருத்துவ தேவைகளுக்காக இந்த வைத்தியசாலைக்கே வருகை தருகின்றனர்.


குறித்த வைத்தியசாலையில் சிறுவர், மகப்பேற்று, சத்திரசிகிச்சை ஆகிய பிரிவுகளுக்குரிய விசேட வைத்திய நிபுணர்களுக்கும் தாதியர்களுக்கும் பற்றாக்குறை காணப்படுவதாகவும் நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் வைத்தியசாலையின் ஆய்வுகூடத்திற்கு பரீசோதகர்கள் மூன்று பேர் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது ஒருவர் மாத்திரமே மிகவும் தியாகத்துடன் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த வைத்தியசாலையில் அனைத்து நோய்களையும் இனங்கண்டு அதற்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்குரிய வைத்திய உபகரணங்கள் உள்ள போதிலும் அதனை இயக்குவதற்கு உரிய வைத்தியர்கள் மற்றும் உதவியாளர்கள் இல்லாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் வவுனியா அல்லது
யாழ்ப்பாணம் ஆகிய வைத்தியசாலைகளுக்கு இடமாற்றப்படுவதாகவும் நோயாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, ஒரு மாவட்ட வைத்தியசாலையாகவுள்ள மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் மாவட்ட வைத்தியசாலைக்கு இருக்க வேண்டிய ஆளனி மற்றும் வளப்பற்றாக்குறை உள்ளிட்ட வசதிகள் எதுவுமின்றி இயங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிடும் நோயாளர்கள் தமது

மருத்துவ தேவைகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலையில் காணப்படும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .