2025 ஜூலை 30, புதன்கிழமை

முல்லைத்தீவில் மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத சகல கிராமங்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இதற்கென மின்சக்தி அமைச்சு இருபது கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி பகுதியில் முக்கியஸ்தர்கள், பொதுமக்களுடனான  கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இன்று உரிமை பற்றி பேசுவதற்கு நேரமில்லை. யுத்தத்தினால் நாம் பல இழப்புக்களை சந்தித்துள்ளோம். எனவே யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்த அரசாங்கம் மிகவும் விருப்பத்துடன் உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று பாதை, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ரிசாட் பதியுதீன் ஆகியோர்  அபிவிருத்தி திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கின்றனர்.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு நானும் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் மின்சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் சென்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின் இணைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டோம். இதற்கு இணங்க மின்சக்தி அமைச்சு இருபது கோடி ரூபா நிதியை  ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபையின் உதவியுடன் இந்த வாரம் முதல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .