2025 ஜூலை 30, புதன்கிழமை

'வவுனியா பஸ் சாரதி, நடத்துனர் கைதுசெய்யப்பட்டமை ஒருதலைப்பட்சமான செயல்'

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பஸ் நிலையத்தில் தென்னிலங்கை தனியார் பஸ் வண்டிச் சாரதிக்கும் வவுனியா தனியார் பஸ் வண்டிச் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, வவுனியா பஸ் வண்டிச் சாரதியையும் நடத்துனரையும் மாத்திரம் கைதுசெய்துள்ளமை ஒரு தலைப்பட்சமான செயற்பாடு என வன்னி தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று திங்கட்கிழமை அதிகாலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் புறப்படுவதற்கு வவுனியா பஸ் தரிப்பிடத்தில் பஸ் வண்டி தயாராக இருந்த சமயம், தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ் வண்டி ஒன்று  வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து பயணிகளை ஏற்றியபோது வவுனியா பஸ் சாரதியும் நடத்துனரும் தங்காலையில் இருந்து வந்திருந்த பஸ்ஸை செல்லுமாறு பணித்திருந்தனர்.

எனினும் அவர்கள் அதனை கருத்தில் கொள்ளாது பயணிகளை ஏற்றவே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இது தொடர்பில் தங்காலை பஸ்  சாரதி வவுனியா பொலிஸில் முறைப்பாட்டை செய்ததுடன், தனது தங்கச்சங்கிலியும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வவுனியா பஸ் வண்டிச் சாரதி மற்றும் நடத்துனர் கைதுசெய்யப்பட்டதுடன், தங்காலையில் இருந்து வந்திருந்த பஸ் வண்டி பயணத்தை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .