2025 ஜூலை 30, புதன்கிழமை

விடுதலை புலிகளின் வழிமுறையை கூட்டமைப்பு பின்பற்றுகின்றது: மாகாண சபை உறுப்பினர்

Super User   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஆர்.ரஸ்மின்


விடுதலை புலிகளின் வழிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றி வருகின்றது என மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.டி.ஜெகத் குமார தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சியை ஆதரித்து அபிவிருத்தியின் முழுப் பயனையும் பொதுமக்கள் அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வட மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான வை.ஜவாஹிர் (ஜனோபர்) விடுத்த அழைப்பையேற்று மேல் மாகாண சபை உறுப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

இதன்போது முல்லைத்தீவு, தண்ணீரூற்றில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இன்று வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் மக்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு இன்று அபிவிருத்தியே முதன்மையாக தேவைப்படுகிறது. ஆனால் இன்று மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிழையான கருத்துக்களைச் சொல்லி மக்களை பிழையாக வழிநடத்த பார்க்கிறனர்.

ஆனால் அவர்களினால் எதுவிதமான அபிவிருத்திகளையும் செய்ய முடியாது. அரசாங்கத்தினால் மட்டுமே முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .