2025 ஜூலை 30, புதன்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சந்திப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சியாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

தண்ணீரூற்று ஊற்றங்கரை வீதியிலுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெகத் குமார, பொருளாளர் எம்.எம்.அன்வர், முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ரி.யோகேந்திரன், மன்னார் மாவட்ட சமுர்த்தி வங்ச்சங்க முகாமையாளர் ஏ.ஜே.கே. ஜேகப் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொணடனர்.

இச்சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்றுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பற்றியும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .