2025 ஜூலை 30, புதன்கிழமை

நாட்டை துண்டாட இடம்கொடுக்கமாட்டேன்: ஜனாதிபதி

Super User   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

சில கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனகள் 4 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையை ஞாபகப்படுத்துகின்றன. எனினும், இந்த நாட்டை துண்டு துண்டாக்குவதற்கு நான் யாருக்கும் இடம்கொடுக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கூட்டம் வவனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"பிரபாகரன் சொன்ன கதையையே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சொல்கின்றனர். நாட்டை பிரிப்பதற்கு புலிகள் அன்று முயற்சித்ததை போன்று இன்று இவர்கள் செயற்படுகின்றனர். ஆனால், நாம் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு பாடுபட வேண்டும். தென்னிலங்கையில் உள்ளவர்கள் தமிழை கற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அண்மையில் நான் கிளிநொச்சிக்கு சென்றபோது அங்குள்ளவர்கள் சிங்களம் படிக்க ஆசைப்படுகின்றனர். காணி மற்றும் வீட்டுப் பிரச்சனை இங்கு மட்டுமல்ல இலங்கை முழுவதும் உள்ளது. இந்த பிரச்சனையை ஒரே நாளில் இல்லாமல் செய்துவிட முடியாது. நீண்ட நாட்களாக நீங்கள் பட்ட துன்பங்கள் எல்லாம் எனக்கு தெரியும். அந்த நிலைமை இன்று இல்லை. நாம் ஒன்றாகவே வாழ்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன மத வேறுபாடு இன்றி அரசியல் வேறுபாடின்றி ஒன்றாக நாம் இருப்போம். எம்மிடம் குறுகிய அரசியல் நோக்கம் கிடையாது. இனவாதம் பிரிவினைவாதம் இல்லாது எப்போதும் நாம் ஒது தாய் பிள்ளைகளாக வாழ் வேண்டும். இந்த பிரதேசத்தை விடுவித்து சுதந்திரமாக இருக்கும் காலகட்த்திலேயே இத் தேர்தலை நாம் நடத்துகின்றோம்.

முன்னர் பிரதேச சபை மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்தினோம். தற்போது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது.
ஏனைய பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ள அதேயளவு அதிகாரத்தையும் இப்பகுதிக்கும் கொடுத்துள்ளேன். இந்நிலையில் அன்று கையில் இருப்பதை எடுத்துக்கொண்டு முஸ்லிம் மக்களும் சிங்கள மற்றும் தமிழ் மக்களும் ஓடிய நிலைமையொன்று தோன்றுவதற்கு அனுமதிக்க முடியாது. எனவே இன மத பேதங்களை ஏற்படுத்தாது அனைவரும் அபிவிருத்திக்காக ஒன்றுபட வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .