2025 ஜூலை 30, புதன்கிழமை

ரெலோ இயக்க குகராஜாவின் நினைவுத்தூபிக்கு சேதம் விளைவிப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்து இ. கிறிஸ்டி குகராஜாவின் நினைவுத்தூபியை இனந்தெரியாதோர் சேதப்படுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரே  இன்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது நினைவு தூபியிலிருந்த கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டுள்ளதுடன் தூபிக்கு முன்பாகவிருந்த மின்குமிழ்களும் நொறுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் இன்று இடம்பெற்ற மைதானத்திற்கு முன்பாக அமைந்திருந்த இத் தூபியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தெர்டுர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்,

1999 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட எமது வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்த குகனின் நினைவாககே இத் தூபி அமைக்கப்பட்டிருந்தது.

இது வரை காலமும் எவ்வித பாதிப்புமின்றி காணப்பட்ட இத் தூபி ஜனாதிபதி வந்து சென்று சில மணி நேரத்தில் உடைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இத் தூபியை முழுமையாக அகற்றுவதற்கு சிலர் நடவடிக்கை எடுப்பதாக அறிகின்றோம். எனினும் அதற்கு நாம் அனுமதியோம்.

இவ்வாறான நிலையில் இது மிலேச்;சத்தனமான செயலாகும். இவ்வாறான இறந்தவர்களின் நினைவு தூபிகளை உடைப்பதானது கண்டிக்கத்தக்க விடயம்.

இச் செயலை தமிழீழ விடுதலை இயக்கம் வன்மையாக கண்டிப்பதுடன்; வவுனியா பொலி;ஸார் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .