2025 ஜூலை 30, புதன்கிழமை

மொழி வேறுபட்டாலும் இரத்தம் ஒன்றே: ஜனாதிபதி

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'நாம் எல்லோரும் இந்த நாட்டிலே பிறந்த மக்கள். நாம் பேசும் மொழி வேறாக இருக்களாம் ஆனால் நம் கைகளை வெட்டிப்பார்த்தால் அதில் வரக்கூடிய இரத்தம் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும். இனபேதத்தையும் மதவாதத்தையும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக்கூடாது' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடமாகாணசபை தேர்தலில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கும் முகமாக தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்று முன்தினத் (11) புதன்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

'2005 மற்றும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களிலே இந்த மாவட்டமே அதிகப்படியான வாக்குகளை பெற்றுத்தந்தது. இன்று போல அன்றும் இதே போன்று தான் றிஸாட் பதியுதீனும் பாடுபட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளில் சில உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் எங்களோடு சேர்ந்தார்கள். அதற்காக நான் சந்தோசப்படுகிறேன்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போதும், பிரதேச சபைத் தேர்தலின் போதும், ஜனாதிபதி தேர்தலின் போதும் உங்கள் வாக்குகளை நீங்கள் பயன்படுத்தினீர்கள். இப்போது மாகாணசபை தேர்தலை நாங்கள் ஒழுங்கு செய்திருக்கின்றோம்.

இந்த மாகாணசபை தேர்தலை நடாத்துவதே இந்த கூட்டமைப்பு அரசாங்கத்தின் பாரிய வெற்றி என்பதை நான் உங்களுக்கு கூறிநிற்க விரும்புகின்றேன். நாங்கள் வெளிநாட்டவர் சொன்ன காரணத்தினாலோ இங்கே உள்ளவர்கள் சொன்ன காரணத்தினாலோ இந்த மாகாணசபை தேர்தலை நடத்தவில்லை.

ஜனநாயகத்தை மென்மேலும் சக்திமயப்படுத்துவதற்காக அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய மக்ககுக்கு மக்கள் உறுப்பினர்களை தெரிவு செய்து மாகாணசபைக்கு அனுப்பி அவர்கள் மூலமாக பல சேவைகளை செய்வதற்காக வேண்டித்தான் நாங்கள் இந்த மாகாணசபைத் தேர்தலை ஒழுங்கு செய்தோம்.

இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் .தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நேரடியாக அல்ல மறைமுகமாக செயற்படுத்துகின்றார்கள்.

இங்கே எனக்கு முன்பதாக தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் வந்தார்கள் அவர்களுக்கு ஒரு கை இல்லை, ஒரு கால் இல்லை ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகளோ இந்தியாவிலே, இங்கிலாந்திலே, அமெரிக்காவிலே படித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இங்கிருப்பவர்கள் கஸ்டப்பட்டவர்களும் அப்பாவி இளைஞர்கள் யுவதிகளும் ஆவர்.

எனவே வேறு நாட்டில் இருப்பேர்களுக்காகத்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்துகொண்டிருக்கின்றது. எனவே மீண்டும் பிரிவினவாதத்தை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றார்கள். இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பாளர்கள் இன வாதத்தை மத வாதத்தை பேசி அந்த உணர்வுகளை தட்டி எழுப்பி அதன் மூலமாக வாக்குகளை திரட்ட பார்க்கின்றார்கள்.
 
நாம் எல்லோரும் இந்த நாட்டிலே பிறந்த மக்கள். நாம் பேசும் மொழி வேறாக இருக்களாம் ஆனால் நம் கைகளை வெட்டிப்பார்த்தால் அதில் வரக்கூடிய இரத்தம் சிவப்பு நிற இரத்தம் தான். இன பேதத்தை வைத்துக்கொண்டு மத பேதத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

இந்த ஜனநாயக நாட்டில் உள்ள மக்கள் எந்த இடத்திலும் வாழக்கூடிய உரிமை உள்ளது அதை காப்பாற்ற வேண்டியது எனது கடமை எனது பொறுப்பு. வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்தால் உங்களுடைய சகோதரர்கள் மாகாணசபைக்குப் போவார்கள் உங்களுக்கு சேவை செய்வார்கள்' என்றார்.

  Comments - 0

  • satha Thursday, 12 September 2013 02:43 PM

    அவர் அவர் சொந்த வீட்டில் வாழவைக்கவேண்டியதும் அவர் கடமை அதையும் அவர் மறக்கக்கூடாது...

    Reply : 0       0

    vALLARASU. Thursday, 12 September 2013 03:27 PM

    ஐயா... வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்கலாம், ஆனால் உங்கள் சின்னம் வெற்றிலை ஆயிற்றே, நாங்கள் அதற்கு எப்படி வாக்களிப்பது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .