2025 ஜூலை 30, புதன்கிழமை

கடற் படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடற் படையினருக்கு எதிராக மன்னார் - தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு கிராம மக்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரதேசத்திலுள்ள சிறுத்தோப்பு ஆலயத்திற்கு சொந்தமான 17 ஏக்கர் காணியில் நிலைகொண்டுள்ள கடற் படையினரை வெளியேற கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆலயத்தின் காணியில் அமைந்துள்ள கஜபா கடற்படை முகாமிற்கு முன்பாகவே அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல்இ சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்தரையாடினார். இதன்போது மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் வி.பவாகரன் வருகை தந்து பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின் மக்களுடன் கலந்துரையாடினார்.

இவ்விடயம் தொடர்பாக தவி பிரதேசச் செயலாளர் வி.பவாகரன் மக்களுக்கு தெரிவிக்கையில்,

"குறித்த காணியில் உள்ள கடற் படையின் கஜபா படை அணிக்கான முகாம் அமைப்பது தொடர்பாக காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் பிரசுரம் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தரினால் குறித்த பகுதியில் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.

இந்த வகையில் சிறுத்தோப்பு கிராம மக்களாகிய நீங்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள். இந்த வகையில் இனி இந்த காணியில் எவ்வித அளவைகளும் இடம்பெறாது.தற்போது தேர்தல் காலம் என்பதினால் தேர்தல் முடிவடைந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்தரையாடல் மேற்கொள்ளப்பட்டதன் பின் உரிய நடவடிக்கை சட்ட திட்டத்தின் கீழ் எடுக்கப்படும்" என்றார். இதனைத் தொடர்ந்து மக்கள் அவ்விடத்தை விட்டு சென்றனர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .