2025 ஜூலை 30, புதன்கிழமை

தேசிய தலைவரின் சிந்தனையில் உதித்ததே கூட்டமைப்பு: ரதன்

Super User   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ் பேசும் மக்களின் உண்மை குரலாய் இன்று திகழ்வது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆகும் என தமிழரசு கட்சியின் வவுனியா இளைஞர் அணி தலைவரும் வட மாகாண சபை வேட்பாளருமாகிய எம்.எம். ரதன் தெரிவித்தார்.

இதனை உருவாக்கிய பெருமை எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையே சாரும் என அவர் குறிப்பிட்டார்.

நெடுங்கேணி, மதியாமடு கிராமத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

"வடக்கு, கிழக்கு இணைந்த எமது தமிழர் தாயகத்தின் விடுதலை போராட்டத்தில்  நாம் இன்று இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும் எமது விடுதலை வேட்கையில் நாம் தளர்வடையவில்லை. தமிழ் பேசும் மக்களின் உண்;மை குரலாக தேசத்தின் விடுதலைக்காக போராடும் அதி உயர்ந்த கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும்.

அதனை உருவாக்கி அதற்கு உரமிட்டு வளர்த்தெடுத்து வழிகாட்டிய பெருமை அண்ணன் பிரபாகரனை சார்ந்துகொள்ளும்.
அவரின் நாமத்தோடே இன்றும் மக்கள் நேசிக்கும் கட்சியாக இது விளங்குகிறது. தமிழ் மக்களுக்கு உரிய ஒரே ஒரு கட்சி தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமாகும்.

ஸ்ரீலங்கா தேசத்தில் மகிந்த ராஜபக்ஷ எப்படி செல்வாக்குடன் காணப்படுகின்ராரோ அதேபோல் வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மிகவும் பலம் வாய்ந்த ஒரு கட்சியாக திகழ்கின்றது. இதனை யாரும் மறுக்க முடியாது. நடைபெற இருக்கும் மாகாண சபை தேர்தலும் இதனையே உணர்த்தி நிற்கும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .