2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஆலய நிர்வாக சபையின் செயலாளர் மீது தாக்குதல்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாக சபையின் செயலாளர் கடுமையாக தாக்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த ஆலய நிர்வாக சபையின் செயலாளரான லக்ஸ்மன் பிகிராடோ (வயது-29) என்பவரே கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தரப்பு அரசியல்வாதி ஒருவரினால் இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

இவர், தொலைபேசியில் உரையாடிய நிலையில் புனித லூசியா ஆலய வீதிவழியாக சென்றுகொண்டிருந்தபோது வாகனத்தில் வந்த குறித்த அரசியல்வாதி  மேற்படி நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக தாக்கியுளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .