2025 ஜூலை 23, புதன்கிழமை

வயலிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 21 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, நெளுக்குளம் மன்னார் வீதி பகுதியியிலுள்ள வயலிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
தனது வயலுக்குச் நேற்று மதியம் சென்ற இராமன் சின்னையா (வயது 67) என்பவர் இராவாகியும் வீடு திரும்பாமையால் அவரை உறவினர்கள் தேடியுள்ளனர்.

அப்பொழுதே அவர் வயல் வாய்க்கால் கரையில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சடலம் இன்று மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .