2025 ஜூலை 23, புதன்கிழமை

முல்லைத்தீவில் பாம்புக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்கான 3 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

முல்லைத்தீவு, மல்லாவிப் பகுதியில் பெண்கள் இருவரும்  ஒட்டுசுட்டான் பகுதியில் விவசாயி ஒருவரும் நேற்று சனிக்கிழமை மாலை பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளனர்.

மல்லாவிப் பகுதியில் பாம்புக் கடிக்கு இலக்கான பெண்கள் இருவரும் உடனடியாக மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் பாம்புக் கடிக்கு இலக்கான விவசாயி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மாரி காலமாகையால் பாம்புப் புற்றுகளினுள் மழை நீர் உட்செல்வதினால் பாம்புகள் புற்றுகளிலிருந்து வெளி வருகின்றன. இதனால் பாம்புக் கடிக்கு இலக்காகும் சம்பவங்களும் அதிகரித்துக்  காணப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .